Friday, January 25, 2019

வேத வசனங்கள் ஜனவரி 2019 பிரசன்ன ஆலயத்திலிருந்து......

தினசரி வேத வசனங்கள் மற்றும் சட்ட வாக்கியங்கள் பிரசன்ன ஆலயத்திலிருந்து





Sunday, October 14, 2018

பரிபாலணை கமிட்டி


பிரசன்ன  ஆலய சபை நிறுவனர் வைத்தியர் டேவிட் தாத்தா மறைவுக்கு பின் மாணிக்கம் ஜோசப் ரவி (A.M.J. ரவி ) அவர்கள் செயலாளராக பொறுப்பேற்று சபையை வழிநடத்தினார்கள்.
2011 ம் ஆண்டு நவம்பரில் அவர்கள் மறைவுக்கு பின்பு பரிபாலணை கமிட்டி நிறுவ தீர்மானிக்கபட்டு  2012  ம் ஆண்டு தேவாலய பரிபாலணை கமிட்டி நிறுவப்பட்டது.

ஆரம்ப நாள்களில் இருந்து இன்று வரை சபை மூப்பர்கள் பற்றிய விபரம்
 சபை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 2006 வரை சபை மூப்பர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதல் சேகர கமிட்டிஉறுப்பினர் - திரு.தாவீது
2006 வரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சேகர கமிட்டி உறுப்பினர்கள்
திரு.இஸ்ரவேல் தங்கராஜ்
திரு.யோசேப்பு
திரு.கோவில்பிச்சை
திரு.பால்பாண்டி
திருமதி .ரெஜினா ரவி
திரு.பட்டுராஜ்

2009 ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்
திரு.இஸ்ரவேல் தங்கராஜ்
திரு.யோசேப்பு
திரு.கோவில்பிச்சை
திரு.பால்பாண்டி
திருமதி .ரெஜினா ரவி
திரு.பட்டுராஜ்
திரு.பாக்கியநாதன்

2013 ம் ஆண்டு மே மாதம் திரு.யோசேப்பு அவர்கள் மறைவுக்கு பின் அவர்கள் மகன் திரு.ஞானராஜ் பால்துரை சேகர கமிட்டி உறுப்பினராக பொறுப்பேற்றார்.

2013 ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்
திரு.இஸ்ரவேல் தங்கராஜ்
திரு.ஞானராஜ் பால்துரை
திரு.கோவில்பிச்சை
திரு.பால்பாண்டி
திருமதி.ரெஜினா ரவி
திரு.பட்டுராஜ்
திரு.பாக்கியநாதன்
திருமதி.குணசீலி
திரு.கிஃட்சன்
திரு.எசேக்கியல் இன்பராஜ்


இன்றைய  பொன்விழா ஆண்டின் பரிபாலணை கமிட்டி உறுப்பினர்கள் 
1. தலைவர்           - திரு.இஸ்ரவேல் தங்கராஜ்
2.செயலாளர்       - திரு.ஞானராஜ் பால்துரை
3.பொருளாளர்    - திரு.மணிராஜா
உறுப்பினர்கள்:
  • திருமதி .ரெஜினா ரவி
  • திரு.பட்டுராஜ்
  • திரு.பாக்கியநாதன் 
  • திரு.தேவதாஸ்
  • திரு.எசேக்கியல் இன்பராஜ்
  • திரு.கிஃட்சன்
  • திரு.விஜயகுமார்
  • திருமதி.குணசீலி

Wednesday, October 10, 2018

பிரசன்ன ஆலய தேர்வுக்குழு

கர்த்தரும் நம்முடைய இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வுக்குழுவின் அணைத்து நிகழ்ச்சிகளிலும் உறுதுணையாக பக்கபலமாக இருந்த சபை உபதேசியார் ஆசிரியர் திரு.அடைக்கலம் தர்மராஜ் ஐயாவுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 ஆரம்ப நாள்களில் A.M.J. ரவி  அவர்களின் வாஞ்சையின் படி வேத வசன தேர்வுகளில் நம் சபை சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தால் மிக சிறிய அளவில் ஜோசப் செல்வமாணிக்கம் மற்றும் ஜெரின் சாமுவேல் அவர்களால் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.



ஆரம்ப நாள்களில் பெண்களுக்கான மாதாந்திர வினாத்தாள்கள் எல்லா மாதமும் வீட்டுக்கு எழுத கொடுத்து அடுத்த மாதத்தில் திரும்ப வாங்கும் முறை பின்பற்றப்பட்டது. ஒவ்வொரு  வருடமும் சில மாற்றங்களுடன் தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒருவர் தாமாக முன்வந்து வினாக்களை தயார் செய்கிறார்கள்

2013-ஜோசப் செல்வமாணிக்கம் & ஜெரின் சாமுவேல்

2014-ஜோசப் செல்வமாணிக்கம் & ஜெரின் சாமுவேல்

2015-ஜோசப் செல்வமாணிக்கம் & ஜெரின் சாமுவேல்

2016-திருமதி.ஸ்டெல்லா வின்சென்ட் & ஜெரின் சாமுவேல்

2017-திருமதி.ஸ்டெல்லா வின்சென்ட் & ஜெரின் சாமுவேல்

2018-திருமதி.குளோரியா

2018ம் ஆண்டு  பிப்ரவரி முதல் ஆலயத்தில் வந்து தேர்வு எழுதும் முறை திருமதி.குளோரியா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடந்து வருகிறது.

 மேலும் 2014ம் ஆண்டு முதல்  மாதந்தோறும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு  வருகிறது இந்த போட்டிகளை திரு.ஜஸ்டின் கோபிநாத் அவர்கள் கடந்த ஐந்து  வருடங்களாக சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

 பொன்விழாவை முன்னிட்டு சிறப்பு வினாடி வினா போட்டி "EPIQUIZ" பொன்விழா அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது.

    2013ம் ஆண்டு முதல் தேர்வுக்குழுவை சேர்ந்த  திரு.ஜஸ்டின் கோபிநாத் அவர்கள் ஞாயிறு பாடசாலை, வாலிபர் கூட்டங்கள் மற்றும்  சிறுவர் பண்டிகைகளை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

    2014  ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதியன்று நமது தேவாலய இணையதளம் (www.epiphanychurch.in) ஜோசப் செல்வமாணிக்கம் மூலமாக நிறுவப்பட்டது.

2014  ம் ஆண்டு ஜனவரி முதல் பிறந்தநாள் திருமணநாள் அறிவிப்புகள் கொடுக்கப்படுகிறது சபை கோவில்குட்டியார்  திரு.ரூபன் அவர்கள் மிக உதவியாக இருந்தார்கள். திரு.ஜஸ்டின் கோபிநாத் மூலமாக இந்த சேவை நடைபெற்று வருகிறது.  2016 ம் ஆண்டு மே மாத முதல் தினசரி தியானவசனங்கள் , பிறந்தநாள் திருமணநாள் அறிவிப்புகள் இணையதளத்தில் பதிவுசெய்யப்படுகிறது. தேவாலய பண்டிகை நிகழ்வுகள் போட்டோ கேலரி மூலமாக இணையதளத்தில் பதிவுசெய்யப்படுகிறது.

   2015ம் ஆண்டு WhatsApp குழு ஆரம்பிக்கப்பட்டது இதன் மூலம் தினசரி வேத வசனம் , பிறந்தநாள் , திருமண நாள் அறிவிப்புகள் , முக்கிய அறிவிப்புகள் போன்றவை அறிவிக்கப்படுகிறது

    2018 ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதியன்று நமது தேவாலய "CsiECM" SMS சேவை ஆரம்பிக்கப்பட்டது இதன் மூலம் சத்தியவசனம்   , பிறந்தநாள் ,திருமணநாள் அறிவிப்புகள் , ஜெபக்கூட்டம் , பண்டிகை , மாதாந்திர தேர்வுகள் , தேர்வு முடிவுகள் , மரண அறிவிப்புகள் , கமிட்டி நிர்வாக முடிவுகள் போன்றவை அறிவிக்கபடுகின்றன. 

2017 ம் ஆண்டு முதல் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

   மணிநகர் கிறிஸ்தவ ஐக்கிய சங்கம் என்னும் பெயரில் இருந்து பிரிக்கப்பட்டு

   2018 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதியன்று நமது தேவாலய தேர்வுக்குழு அனைத்து பரிபாலனை கமிட்டி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறுவப்பட்டது .

தேர்வுக்குழு உறுப்பினர்கள்

தலைவர்: 
P.ஜோசப் ஃபிராங்கிளின்

உறுப்பினர்கள்:

1. குளோரியா

2. ஜெரின் சாமுவேல்

3. ஜஸ்டின் கோபிநாத்

4. எக்கோலியா

5. ஜோசப் செல்வமாணிக்கம்.

 இந்த தேர்வுக்குழுவானது வேததேர்வுகள் மட்டுமன்றி விடுமுறை பாடசாலை, ஞாயிறு பாடசாலை , வாலிபர் பண்டிகைகள் , சிறுவர் பண்டிகைகள், இணையதளம் , வாட்ஸ்ஆப் , CsiECM குறுந்தகவல் சேவை போன்றவற்றையும் நிர்வகிக்கின்றது.

வரும் நாள்களில் தேர்வுக்குழுவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் இதன்படி திரு.A.M.J.ரவி அவர்களின் தரிசனப்படி சபை இல்லாத இடங்களில் சபைகளை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளோம்.



 திரு.A.M.J.ரவி அவர்கள் அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவார்கள் "கர்த்தர் நடத்துவார்" இன்று இந்த பொன்விழா ஆண்டில் இதை ஆரம்பிக்கிறோம்.

கர்த்தர் நடத்துவார்


என்றும் ஜெபத்துடன்,

திரு.P. ஜோசப் ஃபிராங்கிளின்
தலைவர் - தேர்வுக்குழு
joseph@epiphanychurch.in
www.epiphanychurch.in

Monday, March 6, 2017

கொடுத்தவருக்காய் கொடுப்போம்!..

“நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது” (மத்தேயு 6:3).

‘இந்த ஆலயம் கட்டப்பட்டபோது முன் கதவுக்கு நான்தான் பணம் கொடுத்தேன்’ என்றும், ‘இங்குள்ள விளக்குகள் எல்லாம் இறந்துபோன எனது தாத்தா நினைவாக நான்தான் கொடுத்தேன்’ என்றும் பலர் பெருமையாகச் சொல்லக் கேட்டிருப்போம்.

இன்றைய வாசிப்புப் பகுதியில், தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் உதாரத்துவமாய் பல பொருட்களையும் பொன், மற்றும் பலவித உலோகங்களையும் கொடுத்ததைக் காண்கிறோம். அப்படிக் கொடுத்தபோது தாவீது ராஜா, “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது. உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்” (1நாளா.29:14) என்று ஜெபித்தான். ஆனால், இன்றுவரை நாமோ, சாலொமோன்தான் கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டினான் என்கிறோம். அது உண்மை. ஆனால், அது கட்டப்படுவதற்கு எத்தனையோ பேரின் உதவிகள் மறைந்திருந்தன என்பதை நாம் சிந்திப்பதில்லை. என்றாலும், எவரும் அதற்கு உரிமை கொண்டாடவில்லை. காரணம், எல்லோரும் தேவனுக்காக, அவரது மகிமைக்காக, அவரது ஆலயம் கட்டப்படுவதற்காகவே கொடுத்தார்கள்.

இன்று என்ன மனநோக்கோடு தேவனுடைய வேலைக்கும், பிறருக்குக்கும் கொடுக்கிறோம். தர்மம் செய்யும்போது அது அந்தரங்கத்தில் செய்யப்பட வேண்டும் என்று இயேசு சொன்னார். நாம் கொடுப்பது நமது பெருமைகளை வளர்த்துக்கொள்ளவா அல்லது தேவபணி வளரவும், பிறர் தேவைகள் சந்திக்கப்படவுமா? கொடுப்பதில் நாம் பெருமைகொள்ள எதுவுமேயில்லை காரணம், எல்லாவற்றையும் தேவனிடமிருந்தே பெற்றுக்கொண்டு, அவருக்கே கொடுக்கிறோம். நாம் நிர்வாணிகளாய் இவ்வுலகிற்கு வந்தோம். மீண்டும் நிர்வாணிகளாகவே போவோம். இடையில் ஏற்பட்ட யாவும் கர்த்தர் கிருபையாய் நமக்குக் கொடுத்தவைகளே! பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ள எவ்வளவாய் முந்திக் கொள்கிறோமா, அதிலும் அதிகமாகக் கொடுப்பதற்கும் தாராள குணமுள்ளவர்களாகும்படி நம்மைப் பயிற்றுவித்துக்கொள்வது அவசியம். தம்மையே நமக்காக தந்த தேவனை ஆராதிக்கின்ற அவருடைய பிள்ளைகள் நாம் கொடுப்பதில் எப்படிப் பின்நிற்க முடியும்?

“ஒருவன் இவ்வுலக ஆஸ்தியுடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?” (1யோவா.3:17).
------------------------------
இந்த சேவையை அநேகருக்கு அறிமுகம் செய்யுங்கள். எமது அனுதின தியானத்தை வாட்ஸ்அப்பில் பெறுவதற்கு +919916114455 எண்ணை உங்கள் மொபைலில் பதிவு (SAVE) செய்து பின்னர் “NEED“ என்று அனுப்புங்கள். மின்னஞ்சலில் பெற Visit us @ www.kinggospel.com
------------------------------

Saturday, December 24, 2016

Merry Christmas

We wish you a Merry Christmas

For all epiphanies......

By

Epiphany Church Maninagar
Nazareth