Tuesday, February 16, 2016

கிறிஸ்துவின் சரீரம் - 17/02/16

நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களுமாயிருக்கிறீர்கள். 1 கொரி 12:27

படிதத்தில் என்னைக் கவர்ந்த ஓர் பதிவு. ஓர் தச்சு ஆசாரியின் உபகரணங்கள் ஒன்றுகூடி ஓர் மாநாடு நடத்தியது... சகோதரன் சுத்தியல், நாற்காலியில் அமர்ந்திருந்தார் சுத்தியல் சகோதரன் அதிக சத்தம் போடுகிறபடியால் அவர் விலக்கப்பட வேண்டுமென கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதை அவரிடம் தெரிவித்தனர். உடனே அவர், "நான் விலக வேண்டுமென்றால், சகோதரன் தாமர் கருவியும் (துவாரம் போடும் ) விலக வேண்டும் ...கவர்ச்சியற்ற அவரால் என்ன பிரயோஜனம்? என வினவி நின்றார்.

இதைக்கேட்ட சகோதரன் தாமர் கருவி குதித்தெழுந்து, "நான் போய் விடுகிறேன், ஆனால்... சகோதரன் ஸ்குருவும் போய் விட வேண்டும். ஒரு காரியத்தை செய்வதற்கு அவரை "திருகு, திருகு" என்றல்லவா திருக வேண்டியிருக்கிறது!" என குத்தலாக கூறினார்.

சகோதரன் ஸ்குரு சொன்னார் "நான் போவதற்கு ரெடி! ஆனால்... சகோதரன் இழைப்புக் கருவியும் உடனே விலக வேண்டும். இவரது கிரியையெல்லாம் மேலோட்டமானதே! அதில் கொஞ்சமும் ஆழம் இல்லை" என வெதும்பி கூறினார். உடனே இழைப்புக் கருவி எழுந்து, நான் போக வேண்டுமென்றால், சகோதரன் அளவுகோளும் உடனே விலக வேண்டும். பின் என்ன... இவர் தான் மட்டுமே சரிபோல, எப்ப பார்த்தாலும் கூட்டத்திலுள்ள மற்றவர்களையே அளந்து கொண்டிருக்கிறார்" எனக் காட்டமாகக் கூறினார்.

சகோதரன் அளவுகோல் நிமிர்ந்து நின்று சகோதரன் உப்புத்தாளை குறை கூறி "நான் போவதைக் குறித்து கவலைப்படவில்லை, இந்த உப்புத்தாள் சகோதரனை பாருங்கள், இவர் மிஞ்சிப்போன கரடுமுரடான பேர்வழி, இவர் பொழப்பே ஜனங்களை எதிர்ப்பூட்டும்படி உரசிக்கொண்டே இருப்பதுதான், என புழுங்கிக் கூறினார். இவ்வாறு சூடான கருத்துக்கள் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்த வேளையில்....!

நாசரேத்தின் தச்சர் உள்ளே நடந்து வந்தார்.!! அவர் தன்னுடைய மேலங்கியை உடுத்திக் கொண்டார் . அந்நாளின் தன்னுடைய வேலையை ஆரம்பிக்கும்படி தச்சு மேஜைக்கு சென்றார் . அவர் ...ஸ்குருவையும், தாமர் கருவியையும், உப்புத்தாளையும், ரம்பத்தையும், சுத்தியலையும், இழைப்புக் கருவியையும், அளவு கோலையும் மற்றும் உள்ள அனைத்து உபகரணங்களையும் அதற்கு தகுந்தபடி வேலையில் ஈடுபடுத்தினார்!

இவ்வாறு, அந்நாளின் வேலை முடிந்த பிறகு சகோதரன் ரம்பம் பவ்யமாக எழுந்து நின்று, "பிரியமுள்ள சகோதரர்களே, நாம் அனைவருமே தேவனுடைய உடன் வேலையாட்கள் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்" என நா தழுதழுக்க கூறினார். தச்சு உபகரணங்கள்,  ஒருவரையொருவர் சாட்டிய குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையற்றவைகள் என கூறி விட முடியாது. இருப்பினும் தச்சர் இவர்கள் ஒவ்வொருவரையும் உபயோகப்படுத்தின விதமானது, ஓர் இடத்தில் அவர் உபயோகப்படுத்தின இடத்திற்க்குப் பதிலாய் வேறொருவர் அதைச்செய்ய முடியாதிருந்தது.

தேவன் நம்மை ஒன்று போல் சிருஷ்டிக்கவில்லை. இருப்பினும், ஓர் குறிப்பிட்ட ஊழியத்திற்க்கு நாம் ஒவ்வொருவரும் அவருக்கு தேவை. அவ்வூழியம் ஒருவருக்கொருவர் வேறுபட்டதாய் இருக்கும். கர்த்தர் உங்களை எவ்வாறு பயன்படுத்த விரும்புகின்றாரோ, அதற்க்கு உங்களை ஒப்புக்கொடுத்து வாழ்ந்திடுங்கள். கர்த்தர் தாமே ஆசிர்பதிப்பாராக. ஆமேன். அல்லேலூயா.
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------

No comments:

Post a Comment