“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது”. (யாக்.5:16)
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. சில தினங்களுக்கு முன்பாக ஒரு சகோதரி சிவகாசியில் இருந்து என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். அந்த சகோதரி தனக்கு தெரிந்த தென்காசியில் வசிக்கும் சகோதரி ஒருவரின் குழந்தை பாக்கியத்திற்காக ஜெபிக்கும் படியாக கேட்டிருந்தார். நாம் செய்து வருகின்ற அன்னாளின் ஜெபத்தில் கடந்த வாரத்திலிருந்து பங்கெடுத்து உபவாசித்து ஜெபித்து வந்துள்ளார். தென்காசியில் வசிக்கும் சகோதரி நமது அனுதின செய்திகளை படிப்பவரா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய பெயரைக் கொடுத்த சகோதரி அவருக்காக ஐந்து நாட்கள் உபவாசித்து ஜெபித்துள்ளார். கர்த்தர் இந்த ஜெபத்தின் சத்ததைக் கேட்டு தென்காசியில் வசிக்கும் சகோதரிக்கு கர்ப்பத்தின் பாக்கியத்தை கொடுத்து ஆசிர்வதித்துளார்.
உலகத்தில் பலவிதங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியும். அதைப்போல ஒரு பலசாலி பலவீனமானவனுக்கு உதவி செய்ய முடியும். அதைப்போலவே ஆள்பலம் கொண்டவர் தன்னுடைய பலத்தினால் மற்றவர்களுக்கு அரசாங்கத்தில் சிபாரிசு செய்ய முடியும். அதைப்போலவே பல பட்டங்களை பெற்ற அறிவுள்ளவர்கள் படிப்பறிவில்லாத மக்களுக்கு கல்வி உதவியை அருள முடியும். இவை அனைத்திலும் மிக முக்கியமான பேருதவி ஜெப உதவி ஆகும். இந்த ஜெப உதவியை யாரால் செய்ய முடியும்? ஜெபிக் கிறவர்கள், அதாவது ஜெபத்தின் மேல் விசுவாசமும் ஆண்டவர் பேரில் முழு நம்பிக்கையும் உடையவர்களே.
நீங்கள் ஒரு பெரிய ஐசுவரியவானாக அல்லது பெரிய அந்தஸ்து உடையவர்களாக இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதே வேளையில் நீங்கள் தனிமையில் முழங்காலில் நின்று, ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பீர்கள் என்றால் பரலோக தேவன் உங்களை விசேஷித்தவர்களாகக் காண்பார். நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். மேலும், உங்கள் ஜெபம் ஏராளமான ஆசீர்வாதங்களை பரலோகத்திலிருந்து கொண்டு வரும். நீங்கள் இனியும் தாமதிக்காமல் நீங்கள் இனியும் தாமதிக்காமல் ஒருவருக்கொருவர் ஜெபிக்க உங்களை அர்ப்பணியுங்கள். நிச்சயமாக தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அநேகருக்கு நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------
No comments:
Post a Comment