கர்த்தர் அன்னாளின் கர்ப்பத்தை அடைத்திருந்ததால், பெனின்னாள் அவளை துக்கப்படும்படியாக மிகவும் இகழ்ந்து பேசுகின்றாள். இது அதிகபடியான மனஉளச்சலை அன்னாளுக்கு அளித்தது. அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். (Iசாமு 1:1-7). அநேக நேரங்களில் நாமும் கூட அன்னாளைப்போல அழுகின்றவர்களாகவே இருகின்றோம். கர்த்தர் ஏன் அன்னாளின் கர்ப்பத்தை அடைக்க வேண்டும். ஏன் இப்படிப்பட்ட இகழ்ச்சியான சூழ்நிலை அன்னாளுக்கு வரவேண்டும்? என்ற கேள்விகலுளுக்கான பதிலை தெரிந்திருந்தால் நீங்கள் அழமாட்டீர்கள்.
முதலாவது பிறர் நம்மை இகழ்ந்து பேசும்படியான சூழ்நிலையை கர்த்தர் நமது வாழ்க்கையில் அனுமதித்துள்ளார். இரண்டாவது நம்மை இகழ்ந்து பேசும்படியாக ஒரு சிலருக்கு தேவனே கட்டளையிட்டுள்ளார் (II சாமு 16:11). மூன்றாவது புகழ்ச்சி நமக்கு எதிராளியாகவும், இகழ்ச்சி நமது ஆசிர்வாத வாழ்க்கையின் திறவுகோளாகவும் இருக்கின்றது. இந்த மூன்று காரியங்களையும் நீங்கள் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.
புகழ்ச்சியான வார்த்தைகளால் புகழப்பட்ட தாவீது, மகா வேதனையான அனுபவங்களுக்குள் கடந்து சென்ற சம்பவத்தை நாம் வேதத்தில் வாசிக்க முடியும். தாவீது பெலிஸ்தியனாகிய கோலியாத்தை கொன்று திரும்பி வந்தபின்பு, ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று புகழ்ந்து பாடினார்கள். இந்த புகழ்ச்சியான வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் கொலை செய்ய வகை தேடினான். (Iசாமுவேல் 18:6-9).
தாவீது தனது மகன் அப்சலோமுக்கு பயந்து, எருசலேமை விட்டு வெறியேறி பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தாவீதை தூஷித்துக்கொண்டே நடந்துவந்து, கற்களை எறிந்தான். மேலும் சீமேயி, "இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ" என்று தாவீதைத் தூஷித்தான். அப்பொழுது தாவீது தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து, "இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, சீமேயி என்னை தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் (II சாமு 16:1-11).
தாவீது கல்லெறி வாங்கிய பின்னும் அமைதியாக, “ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார்” (II சாமு 16:12) என்கிறார். பின்னாட்களில் தாவீது அரசனின் ராஜ்யம் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. பிறருடைய இகழ்ச்சியான பேச்சுக்களால் நீங்களும் கூட மனமுறிவினால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கலாம். அன்னாளின் வாழ்க்கையைப் போல எனது வாழ்க்கையில் ஏன் இத்தனை நிந்தனைகள்? ஏன் இத்தனை இகழ்ச்சிகள்? என்று சிந்திக்கலாம். தேவன் நிந்தனைக்குப் பதிலாக நன்மையையும், இகழ்ச்சிக்கு பதிலாக புகழ்ச்சியையும் தருகின்றவராக இருகின்றார் என்பதை மறந்து விடாதீரகள்.
சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் (ஏசாயா 61:3) இயேசு கிறிஸ்து ஆவலுடன் காத்திருகின்றார். உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும் (ஏசாயா 61:7). ஆமேன். அல்லேலுயா.
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------
Thursday, February 18, 2016
நிந்தனைக்குப் பதிலாக நன்மை – 19/02/16
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment