Friday, February 19, 2016

தேவனுடைய விருப்பம் – 20/02/16

வேதத்தில் அநேக தந்தைமார்கள் இருந்தாலும் “விசுவாசிகளின் தந்தை” (Father of faith) என்று அழைக்கப்படுகின்றவர் ஆபிரகாமே! (எபி 11:8-9). “கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி.. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்” (ஆதி 17:1-6) என்று வாக்களித்தார்.

ஆபிராம் மற்றும் ஆபிரகாம் என்ற இரண்டு பெயர்களின் அர்த்தமுமே தந்தை என்பதாகும். ஆனால் ஆபிராம் என்றால் “ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தந்தை” (Father for the specific region or people) என்றும், ஆபிரகாம் என்றால் “மக்களினங்களின் தந்தை” (Father of the multitude) என்றும் பொருள். ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தந்தையாக இருக்கும் ஆபிராமை, பூமியில் உள்ள எல்லா மக்களுக்கும் தந்தை யாகவும் மாறச்செய்ய வெண்டுமென்பது அதாவது ஆபிராமை, ஆபிரகாமாக  மாற்றவேண்டுமென்பது தேவனுடைய விருப்பம்.

வேதத்தில் அநேக தாய்மார்கள் இருந்தாலும் விசுவாசிகளின் தாய் என்று அழைக்கப்படுகிறவள் சாராளே! (எபி 11:11). “தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்” (ஆதி 17:15-16). விசுவாசிகளுக்கு மட்டுமல்ல, ஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும் கூட தாயாகும்படி, கர்த்தர் சாராளை ஆசீர்வதித்தார். இளவரசி தான் ஒரு நாட்டின் ராஜாவுக்கு தாயாக இருக்க முடியும்.

சாராய் மற்றும் சாராள் என்ற இரண்டு பெயர்களின் அர்த்தமுமே தாய் அல்லது இளவரசி என்பதாகும். ஆனால் சாராய் என்றால் “ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தாய் அல்லது இளவரசி” (Mother or Princess for the specific region or people) என்றும், சாராள் என்றால் “மக்களினங்களின் தாய் அல்லது இளவரசி” (Mother or Princess of the multitude) என்றும் பொருள். ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு இளவரசியாக அல்லது தாயாக இருக்கும் சாராயை, பூமியில் உள்ள எல்லா மக்களுக்கும் இளவரசியாகவும் அல்லது தாயாகவும் மாறச்செய்ய வேண்டுமென்பது அதாவது சாராயை, சாராளாக மாற்றவேண்டுமென்பது தேவனுடைய விருப்பம்.
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------

No comments:

Post a Comment