“நா நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் - 22/02/15 ன் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்” என்று சாராய் ஆபிராமிடம் கூறுவதை ஆதியாகமம் 16.2-ல் வாசிகின்றோம். இதை வாசிக்கும் பொழுது "கர்த்தர் ஏன் கர்ப்பத்தை அடைக்க வேண்டும்" என்ற கேள்வி வரும். விக்கிரகத்தை வணங்கும் குடும்பத்தில் பிறந்தவர்களுடைய வேண்டுதலை இயேசு கேட்ப்பாரா? என்ற கேள்வியும் அநேகருக்கு உள்ளது. நிச்சயமாக இயேசு உங்கள் வேண்டுதலைக் கேட்ப்பது மட்டுமல்லாமல் பதிலளிக்கவும் போகின்றார். முதலாவது விக்கிரகத்தை வணங்கிய குடும்பத்திலிருந்து தேவன் ஆபிராமையும், சாராயையும் வேறுபிரித்து எவ்வாறு அவர்களை குழந்தை பாக்கியத்தினால் ஆசிர்வதித்தார் என்பதைக் காணலாம்.
கி.மு 2100 ஆண்டுகளில் வாழ்ந்து வந்த "ஊர் நம்மு" (Ur-Nammu) என்ற அரசன் தனது பெயரில் "ஊர்" என்ற பட்டணத்தைக் கட்டி அரசாண்டார். இது இன்றைக்கு தெற்கு ஈராக்கில் "டெல் எல்-முக்காயர்" (Tell el-Muqayyar, south Iraq) என்று அழைக்கப்படுகின்றது. மொசபடோமிய நாகரீகம் உருவான ஐபிராத்து நதியானது, பெரிசிய வளைகுடாவில் கலக்கின்ற இடத்தில் இந்த பட்டணம் அமைந்திருந்தபடியால், இது செழிப்பு நிறைந்த பகுதியாக இருந்தது. அந்த பகுதியில் வாழ்ந்த மொசபடோமிய நாகரீகத்தை சேர்ந்த மக்கள் சந்திரக் கடவுளாகிய "நன்னா" (Nanna) என்ற விக்கிரகத்தையும், சூரியக் கடவுளையும் வழிபட்டு வந்தனர்.
நோவாவின் பத்தாம் தலைமுறையினரான தேராகு இந்த பகுதியில் வாழ்ந்து வந்தார். அவருக்கு எழுபது வயதாக இருந்தபொழுது ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். நோவா ஜலப்பிரளய அழிவுக்குப் பின்பு நோவா 350 வருடம் வாழ்ந்து தனது 950 வயதில் மரித்தார் (ஆதி 9:28,29). அப்பொழுது ஆபிராமுக்கு வயது 58 இருந்திருக்கும். நிச்சயமாக ஜலப்பிரளய அழிவு பற்றி ஆபிராமுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நன்கு தெரிந்திருக்கும். தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தால் அவருடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் ஜலப்பிரளய அழிவுக்குப் பின்பதாக தோன்றிய நோவாவின் வழிமுறையினர், விக்கிரகத்தை வழிபடுகின்றவர்களாக மாறினர்.
ஆபிரகாமின் குடும்பமும் விக்கிரகத்தை வணங்கியதாக நாம் வேதத்தில் வாசித்து அறிய முடியும்.”யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன் நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள். ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்” (யோசுவா 24:2,14).
அந்நிய தெய்வங்களையும் விக்கிரகத்தையும் வணங்கும் குடும்பத்திலிருந்து வெளியேறும் படியாக தேவன் ஆபிராமுக்கு கட்டளையிடுகின்றார். “கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி12:1-2). நீங்கள் ஒருவேளை அந்நிய தேவர்களையும், தெய்வங்களையும் வழிபடுகின்ற குடும்பத்தில் பிறந்திருக்கலாம். முதல்லாவது நீங்கள் விக்கிரக வழிபாட்டை நிறுத்தி, மெய்யான தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை தகப்பனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் உங்களுடைய பேரைப் பெருமைப்படுத்தி, நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார்.
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------
No comments:
Post a Comment