அவமானச் சின்னமாக இருந்த சிலுவையானது, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு பின் அதுவரை நிலவிவந்த சிலுவையின் இழிநிலை மாற்றப்பட்டு அது ஒரு அன்பின் சின்னமாக பாவிகளை இரட்சிக்கம் கிறிஸ்து இயேசுவை நினைவு கூறும் சின்னமாக உலக வரலாற்றில் முக்கியமானதொரு அழியா இடத்தைப் பெற்றுள்ளது. கிறிஸ்துவின் மரணத்திற்கு முன் சிலுவை என்பது தாங்க முடியாத கொடுமையான தண்டனையை நிறைவேற்றும் கருவி. ஒரு கள்வனுக்கோ, ஒரு கொலைப்பாதகனுக்கோ அல்லது ஒரு கலகக்காரனுக்கோ கொடுக்கப்பட்டு வந்து அதிகபட்சமான தண்டனை சிலுவையில் மரிக்கச் செய்வது. உபாகமத்தில் மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது. அது ஒரு பயங்கரமான சாவு.
சிலுவை மரணம் மகா கொடுமையானது. அது மகா பாவிக்கு விதிக்கப்பட்ட தண்டனை. ஏற்கனவே செய்து வைக்கப்பட்டிருக்கும் சிலுவை குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அந்த சிலுவையை அவனே சுமந்துகொண்டு செல்லவேண்டும். அந்த காட்சியைப் பார்க்கும் ஜனங்களின் கேவலமான விமரிசனங்கள், போலிப் பேச்சுகள், தண்டனையை நிறைவேற்றக் காத்திருக்கும் போர்ச் சேவகரின் சித்திரவதைகள் சவுக்கடிகள் இவையெல்லாம் அவன் அனுபவித்துத் தீரவேண்டும். குற்றவாளிகளின் தண்டனையை உடனே சிலுவையிலறைந்து நிறைவேற்றுவதை விட இவைகளை அனுபவிக்கும் காட்சி மிகமிகக் கொடுமையானது ஆகும். சிலுவை என்பது பரம பிதாவின் சித்தத்தை நிறைவேற்றத் தனக்குக் கொடுக்கப்பட்டக் கருவி என்று இயேசு கிறிஸ்து எண்ணினார். ஆகவே சிலுவை அனுபவம் தனது வாழ்க்கையில் வந்த பொழுது அதைக்கண்டு அவர் பின்வாங்கவில்லை.
“தன் சீஷர்களை பார்த்து ஓருவன் என் பின்னே வர விரும்பினால் தன்னைத்தான் வெறுத்துத் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்றார் (மத் 16:24). மாற்கு 8:34ல் இயேசு தன் சீஷர்களுக்கு மட்டுமல்ல, எதிரே இருந்த ஜனங்களையும் பார்த்து இதே கருத்தை வலியுறுத்தியும் பேசுகிறார். மேலும் ஒருவன் இயேசுவிடம் வந்து 'நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ள நான் என்னச் செய்யவேண்டு;?" என்று கேட்டான். இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்து ஒரு குறை அவனிடத்தில் கண்டார். 'உனக்குண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா" என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனானபடியால் அவர் சொன்னதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை (மாற்கு 10:21). சிலர் சிலுவைக்குப் பயப்படுவார்கள்.
“சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. ஆனால் இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது" (1கொரி 1:18) பரிசுத்த அப்போஸ்தலனாகிய பவுலுக்குக் கிடைத்த சிலுவை, “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைப் பாராட்டாதிருப்பேனாக" (கலா 6:14). பவுல் இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து ஏன் மேன்மை பாராட்டியது போல நாமும் மேன்மை பாராட்டுவோமா?
------------------------------------------
குழந்தை பாக்கியத்திற்க்கான அன்னாளின் ஜெபம்: நாள் 40
இன்றைக்கு அறிக்கை செய்ய வேண்டிய வசனங்கள்:
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. சங்கீதம் 34:10
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். சங்கீதம் 37:4
-----------------------------------------
-----------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------
No comments:
Post a Comment