“பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46) இயேசு தம் ஜீவன் போகிற வேளையில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு இப்படிச் சொன்னார். இயேசு தம்முடைய பெலன், சக்தி எல்லாவற்றையும் சிலுவையில் இழந்து ஒன்றும் செய்ய இயலாதவராய் மரணம் அடையவில்லை. அதாவது, அவர்கள் அவரைக் கொலை செய்ததினால் அவர் மரிக்கவில்லை. அவர் ஜீவாதிபதி. ஜீவனைக் கொடுக்கிறவர். அவரிடமிருந்து யாரும் ஜீவனை எடுக்க முடியாது. அவரே அதைக் கொடுத்தால்தான் உண்டு. ஆகவே, அவரே அதை ஒப்புக்கொடுக்கிறார். அவர் தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
பொதுவாகச் சிலுவையில் மரிப்பவர்கள் உயிர்போகும் நேரத்தில் மூச்சு விட முடியாமல் திணறி, தலையை நன்றாகத் தூக்கி, மூச்சு விட முயற்சிப்பார்களாம். மூச்சு விட முடியாமல், உயிர்போன பிறகு தலை தொங்குமாம். ஆனால் இயேசுவோ, தலையைச் சாய்த்து, பிறகு தம் ஆவியை ஒப்புக்கொடுத்தார். இவர்கள் சாகடித்ததால் அவர் சாகவில்லை. அவரே தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்பதை இது காட்டுகிறது.
நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார் (யோவா-10:18) என்ற வார்த்தையின்படி அவருடைய ஜீவனை சத்துருவாலும், ரோம வீரர்களாலும், யூதர்களாலும் எடுக்க முடியவில்லை. அவரே தமது ஜீவனை பிதாவின் கரத்தில் ஒப்புக் கொடுத்து ஜீவனை விட்டார்.
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர் (சங்கீதம் 31:5) என்று தீர்க்கதரிசனமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தாவீது சொன்ன இந்த வார்த்தைகளே தாவீதின் குமாரனாகிய இயேசுவின் வாயிலிருந்து வந்தது. இயேசு தனது மரண தருவாயிலும் வேத வசனங்களையே பேசினார். நாம் இயேசுவைப்போல வேத வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுகின்றோமா? எல்லா சூழ்நிலையிலும் நாம் கர்த்தருடைய வார்த்தைகளை சொல்லதக்கதாக நமது சிந்தையில் வேத வசனங்கள் காணப்பட வேண்டும். அப்பொழுதுதான் இயேசுவைப்போல நாமும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும். நாம் எல்லோரும் ஒரு நாளில் மரிக்கத்தான் போகின்றோம். நமது மரணமானது பயமில்லாததாக, சமாதானம் நிறைந்தததாக நமது ஆவியை பிதாவின் கரங்களில் ஒப்புக்கொடுக்க வேண்டும். ஆமென். அல்லேலுயா.
------------------------------------------
குழந்தை பாக்கியத்திற்க்கான அன்னாளின் ஜெபம்:
இன்றைக்கு அறிக்கை செய்ய வேண்டிய வசனங்கள்:
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். கொரிந்தியர் 12:9
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினிமதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 2:5
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? மத்தேயு 7:11
------------------------------------------
------------------------------------------
எமது அனுதின தியானத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to +919916114455. மின்னஞ்சல் செய்திகளுக்கு vvministry@gmail.com. Visit us @ www.vvministry.com
------------------------------------------
No comments:
Post a Comment